வயதான தோற்றத்தை மாற்ற வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க!
Sep 21, 2017, 11:45 IST

சிலருக்கு 20 அல்லது 25 வயதிலே சருமத்தில் வயது முதிர்ந்தவர் போன்ற தோற்றத்தை தந்து விடும். அவர்கள் வயதிற்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமே இருக்காது. இதனால் அவர்கள் மிகுந்து கவலைக்கு உள்ளாக்குவார்கள். அவர்களுக்குக்கான சில டிப்ஸ் பார்க்கலாம்.
வழிமுறைகள் :
- நாம் உணவில் சேர்த்து கொள்ளும் தயிரை முகத்திற்கு எப்படி பயன்படுத்தினால் நமது தோற்றம் மாறும் என்பதை காணலாம். ஒரு கிண்ணத்தில் 1/2 கப் தயிரை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஆடைகள் இன்றி நன்கு கலக்கி கொள்ளுங்கள். நுரைத்தவுடன் அதனுடன் சிறிதளவு மஞ்சளை சேர்த்து கலக்கி, தயிர் மஞ்சள் நிறத்திற்கு வரும் அளவிற்கு சேர்த்து கொண்டு, அதனுடன் கடலை மாவை கலந்து பேஸ்ட் போல் செய்து கலக்க வேண்டும். இதனை முகத்திற்கு தினம் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்து சிறிது நேரங்கள் கழிந்த பின்னர் நீர் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு கழுவி வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர ஒரு வாரத்திற்குள் சருமத்தில் மாற்றத்தை காணலாம். தேவை என்றால் எலும்பிச்சை சேர்த்து கொள்ள முகம் நல்ல சிவப்பழகை கொடுக்கும்.
- மாதுளை பழத்தின் விதைகளை அரைத்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலமும் மற்றும் அதனை முகத்திற்கு பயன்படுத்தவும் சுருக்கங்கள் மறைந்து பொலிவான சருமத்தை கொடுக்கும். இந்த ஜூஸ் உடன் பப்பாளி அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களின் சாற்றினையும் கலந்து சருமத்திற்கு பயன்படுத்த அழகு கூடுவதோடு முகத்திற்கு எவ்வித குறைபாடுகளும் வராமல் பாதுகாத்து கொள்ளும்.
- கடலை மாவை மட்டும் தினம் குளியலுக்கு பயன்படுத்த கை, கால்களில் இருக்கும் கருமை நிறம் மாறும் மற்றும் சுருக்கங்கள் நீங்கி சருமம் மிருதுவாக மாறி விடும். வெறும் மாவை தினமும் மூன்று அல்லது நான்கு முறை பயன்படுத்த விரைவில் வயதான தோற்றம் நீங்கும், புதிய செல்கள் உருவாகி அழகான தோற்றத்தை பெறுவீர்கள்.
- பீட்ரூட் இரண்டாக வெட்டி அதன் சாற்றினை முகத்திற்கு பயன்படுத்தலாம் அல்லது அதனை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து சருமத்திற்கு பயன்படுத்த இளமையான தோற்றத்தை பெறுவீர்கள், முக பருக்கள் வராது.