நல்ல உணவு பழக்க வழக்கத்தை கொண்டு வர வேண்டுமா?

நாம் அன்றாடம் உண்ணும் உணவிலும் நல்ல பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது ஆரோக்கியமும் மற்றும் உடலையும் சம சீராக வைத்து கொள்ளும்.
நீர் அருந்துவது :
தினமும் நீர் அருந்த வேண்டும். அனைவர்க்கும் இருக்கும் பழக்கம் சாப்பிட்டு முடித்த பின்னர் ஜூஸ் அல்லது இதர குளிர்பானங்களை குடிப்பது, இது மிகவும் தவறான விஷயம். பசி உணர்வு இருந்தால் நன்கு குளிர்ந்த நீரினை அருந்துங்கள்.
காய்கறிகள் :
வயிற்று பசிக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாலட் செய்து அதனுடன் தயிர் சேர்த்து சாப்பிட நல்ல பலனை கொடுக்கும் மற்றும் படியை தீர்க்கும், இதனை மேற்கொள்ள சத்தான உணவுகளை எடுத்து கொண்டு ஆரோக்கியமுடன் வாழுங்கள்.
உங்கள் குளிர் சாதன பெட்டியில் இருக்கும் மற்ற பொருட்களை விட வைட்டைங்கள் மற்றும் நார் சத்துக்கள் இருக்கும் உணவுகளையே வைத்து கொள்ளுங்கள். நாம் தினம் எடுத்து கொள்ளும் உணவுகளில் கண்டிப்பாக அதில் கொஞ்சமாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்க வேண்டும். இது உங்கள் ஆரோக்யத்தில் பெரும் பங்கு கொண்டு உள்ளது.
ஸ்னாக்ஸ் :
சாப்பிட சிறிது நேரத்தில் பசி எடுப்பதற்கு நொறுக்கு தீனிகளை உட்கொள்வதை தவிருங்கள். ஏதேனும் காட்சிகளை பார்த்து கொண்டே நொறுக்கு தீனிகளை உட்கொள்வதை தவிர்த்து, காய்கறிகள், பழங்களை
சாப்பிட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து தானிய வகைகளை சாப்பிடலாம், இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இரவு பசி :
இரவில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படும் பசியை போக்க பழங்களை சாப்பிடலாம், இது உங்களுக்கு நல்ல உறக்கத்தை தரும், காலையில் எவ்வித கோளாறுகளையும் ஏற்படுத்தாது. நொறுக்கு தீனிகளை இரவு சாப்பிடவே கூடாது.