வீட்டின் சுவற்றில் படியும் கறைகளை போக்க வேண்டுமா ?

நம் வீட்டின் தோற்றத்தை கொடுப்பதே சுவர்கள் தான், அதனை பராமரிப்பது மிகவும் அவசியம். சுவர்களில் படியும் கறைகள் வீட்டின் அழகையே கெடுத்து விடும். எந்த பொருட்களை கொண்டு வீட்டின் சுவற்றில் இருக்கும் எண்ணெய் கசடுகளை போக்கலாம் என்று பார்க்கலாம்.
நாம் சாதரணமாக சுவரில் சாய்ந்து அமர்ந்து இருக்கும் பொழுதோ அல்லது கைகளில் இருக்கும் அழுக்குகள் சேருவதாலும், தவறி படும் எண்ணெய் கசடுகளும் வீட்டின் அழகையே பாதித்து விடும்.
பொருட்கள் :
வண்ண பூச்சு :
வீட்டினை அழகு படுத்த உதவும் பெயிண்ட், நாம் அடிக்கும் வண்ண வண்ண கலர்களை கொண்டு அழகு படுத்துகிறோம். சுவற்றில் இருக்கும் எண்ணெய் கரையை போக்குவது அவ்வளவு எளிது அல்ல. வீட்டில் அடிக்க உதவும் பெயிண்ட்களை நேரடியாக பயன்படுத்தாமல், முதலில் சுவர்களை சோப்பு அல்லது மற்ற பொடிகளினை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். பின்னர் அதில் கீழ்ப்பூச்சு சேர்த்து கொள்ளுங்கள், அதன் பின்னரே உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை கொண்டு வண்ணம் தீட்டுங்கள். இது உங்கள் சுவற்றை எப்பொழுதும் அழகாவும் எண்ணெய் கசடுகளை விரைவில் நீக்கவும் பயன்படுகிறது.
கஞ்சி :
வீட்டின் இருக்கும் சோள கஞ்சியை சுவற்றில் நன்கு தேய்த்து கொள்ளுங்கள். சிறிது நேரங்கள் கழிந்த பின்னர் அதனை துடைத்து விடுங்கள். இப்படி செய்வதால் கறைகள் எளிதில் போகாது. கறைகள் போகும் வரை நன்கு தேய்த்தால் தான் போகும், கொஞ்சம் சிரமம் தான், உங்கள் சுவர்களை அழகு படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும்.
வினிகர் கொண்டு கறைகளை போக்கலாம் :
வீட்டின் தரையில் இருக்கும் கறைகளை போக்க பயன்படும் வேதி பொருட்களில் கண்டிப்பாக வினிகர் இருக்கும், வினிகருக்கு எளிதில் கறைகளை போக்கும் ஆற்றல் உள்ளது. ஒரு கிண்ணத்தில் வினிக்கரை எடுத்து கொள்ளுங்கள், ஒரு துணியை கொண்டு வினிகரில் நன்கு நனைத்து சுவரில் கறைகள் இருக்கும் இடத்தில் பயன்படுத்த விரைவில் கறைகள் நீங்கும்.