விரைவில் முடி வளர்ச்சியை பெற வேண்டுமா?

இன்று அனைவரிடத்திலும் இருக்கும் ஒரு எண்ணமே முடி வளர்ச்சி. அதற்கு பல முறைகளை கையாண்டு இருப்பார்கள். அதில் சில பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முதலில் தேவையான உணவுகளை எடுத்து கொள்வது. சத்தான உணவு பழக்கமே மிகவும் அவசியம். உணவுகளில் இருக்கும் சத்துக்கள் மூலமே உடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவி புரியும்.
தலை பராமரிப்பு என்பது தினமும் முடியை பராமரிப்பது, குளியல் போன்றவற்றில் அடங்கும். அதிக வேதி பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
ருசி மிகுந்த தேனை கொண்டும் தலை முடி பராமரிப்புக்கு பயன்படுத்தலாம். முடி உதிர்வு, பொடுகு தொல்லைகள் போன்ற கோளாறுகளுக்கு தேன் மிகவும் இன்றியமையாதது மற்றும் முடியின் வளர்ச்சியை சீக்கிரம் காணலாம்.
தலைக்கு தினமும் எண்ணெய் வைக்க வேண்டும் அது முடிகளின் வேர் நுனிகளை வலு பெற செய்து பராமரிக்கும்.
வெங்காயத்தினை அரைத்து அதன் சாற்றினை தலைக்கு பயன்படுத்த தலையில் இருக்கும் பேன்கள் ஒழிந்து தலையில் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் மற்றும் நீளமான முடி வளர்ச்சியையும் பெறுவீர்கள்.