முகத்தில் ஏற்படும் கருமையை போக்க வேண்டுமா?

முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகள் நீங்க மற்றும் வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட கூடிய வறட்சி, கருமை, முகத்தில் தூசுகள் சேர்வது, அழுக்குகள் படிவது போன்ற கோளாறுகளை நீக்க எண்ணெயை கொண்டு தினம் மசாஜ் செய்ய, சூட்டினால் வர கூடிய பிரச்னைகள் நீங்கி முகத்திற்கு பொலிவை கொடுத்து பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது.
மன அழுத்தத்தால் ஏற்பட கூடிய முக மாற்றங்கள், முக வாட்டம் போன்றவற்றை போக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் மற்றும் இறந்த செல்களை அழித்து வெண்மை தோற்றத்தை கொடுக்கும் புதிய செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.
ஆமணக்கு எண்ணெயையும் பயன்படுத்த நல்ல பலனை தரும். புதிய தோற்றத்தை தர கூடிய வல்லமை கொண்டதே.
தொலைக்காட்சி பார்த்த பிறகு அல்லது கணினி உபயோகித்த பின்போ, கண்களை தண்ணீரை கொண்டு நன்கு கழுவ வேண்டும், இதிலிருந்து கண்களில் கோளாறுகள் வராமலும் மற்றும் பார்வை நரம்புகள் பாதிப்படையாமல் நம் கண்களை பராமரிக்க வேண்டும்.