பொன்னிற தேகம் வேண்டுமா ?

பொன்னிற தேகம் வேண்டுமா ?
அவசர யுகத்தில் அழகு போனதா? மேனி பராமரிப்பு இல்லாமல் தேகம்  பொலிவிழந்து போனதா? சுற்றுப்புற மாசின் காரணமாய் உடல் பளபளுப்பு போனதா ? கவலை கொள்ள தேவை இல்லை, நம் முன்னோர் சொன்ன சில எளிய வழிமுறைகளை கொண்டு இழந்த பொலிவை பெறலாம், பொன்னிற தேகம் கொள்ளலாம்.
  • ஆவாரம் பூ தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தேகம் மின்னும்.
  • ஆரஞ்சு பழம், நெல்லிக்காய் உண்டு வந்தால் வைட்டமின் சி காரணமாய் உடல் பளபளக்கும்.
  • வேப்பம் பூ, மஞ்சள், வெள்ளரி ஆகியவற்றை சேர்ந்து அரைத்து, உடலில் பூசி சிறுது நேரம் கழித்து குளித்தால், உடல் சிவப்பாக மாறும், அழகு கூடும்.
  • வழுவழுப்பான தோல் பெற மருதாணி இலையை தேய்த்து வந்தால் தோல் வழுவழுப்பாகும்.
  • பொன்னாங்கண்ணி கீரையை நெய்விட்டு வதக்கி உப்பும், மிளகும் சேர்த்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் தேகம் பொண்ணை மின்னும்.
  • தேனில் உறிய நெல்லிக்கனியை தினம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தழும்புகள் மறையும், உடல் ஆரோக்கியம் பெரும்.
  • சாதம் வடித்த கஞ்சியை உடலில் பூசி சிறுது நேரம் களைத்து குளித்து வந்தால் கோடையில் வரும் வேர்க்குரு நீங்கும்.
  • துளசி இலையுடன் சுக்கை சேர்த்து நன்றாக அரைத்து தேமல் உள்ள இடங்களில் நன்றாக தடவி வர தேமல் காணாமல் போகும்.
  • மணத்தக்காளி கீரை சாற்றை உடல் முழுவது தடவி 30 நிமிடம் கழித்து குளித்து வந்தால் தேமல் மறைந்து தேகம் மிளிரும்.

Share this story