Tamil Wealth

சிகப்பான கண்ணம் வேண்டுமா? பீட்ரூட் பேஸியல் செய்து பாருங்க!

சிகப்பான கண்ணம் வேண்டுமா? பீட்ரூட் பேஸியல் செய்து பாருங்க!

பீட்ரூட்டை சாப்பிடுவதால் குடலை சுத்தம் செய்து இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் சரும அழகிற்கும் உதவுகிறது. பெரும்பாலும் முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு பீட்ரூட் பெரிதும் உதவுகிறது. பீட்ரூட்டை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி சரும அழகை அதிகரிக்கலாம் அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

பீட்ரூட் பேஸியல்:-

  • பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் மறைந்து அப்பழுக்கற்ற அழகான சருமம் கிடைக்கும்.
  • முல்தானி மெட்டி பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். பீட்ரூட் சாறுடன் முல்தானி மெட்டி சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் முகத்தை கழுவினால் கன்னம் சிகப்பாகவும், அழகாகவும் மாறும்.
  • பீட்ரூட் சாறுடன் சில துளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களை சுற்றியுள்ள கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் கண்ணுக்கே தெரியாமல் மறைந்து விடும்.
  • பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் இரவு தூங்குவதற்கு முன்னர் உதட்டில் தடவி காலையில் எழுந்ததும் கழுவினால் உதடு சிகப்பாக மாறும்.
  • சருமத்தில் உள்ள செல்கள் இறந்து சோர்வாக காணப்பட்டால் முட்டைக் கோஸ் சாறுடன் ரோஸ் வாட்டர் மற்றும் பீட்ரூட் சாறை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சருமத்தை கழுவினால் சருமம் பொலிவு பெறும்.

Share this story