Tamil Wealth

பேருந்துப் பயணத்தின்போது வாந்தியைத் தவிர்க்க இதைக் கடைபிடியுங்கள்!!

பேருந்துப் பயணத்தின்போது வாந்தியைத் தவிர்க்க இதைக் கடைபிடியுங்கள்!!

பேருந்துப் பயணம் என்றாலே சிலருக்கு எட்டிக்காய்தான், அதற்கு வேறு ஒன்றும் காரணமில்லை பேருந்தில் ஏறிய சில மணி நிமிடங்களில் வரும் வாந்தி அந்தப் பயணத்தை நரகமாக்கிவிடும்.

பேருந்துப் பயணத்தின்போது வாந்தி வராமல் தடுக்க அப்போ என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? நான் சொல்லும் இந்த டிப்ஸ்களை கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள் போதும்.

கடைசியில் உள்ள நீளமான இருக்கை அதிகம் குலுங்கச் செய்யும், அதனால் அதை தவிர்ப்பது நல்லது. வெறும் வயிற்றுடன் பயணம் செய்வது கூடாது, அப்படின்னா வயிறு நிறைய சாப்பிடலாம்போல் என்று நினைக்காதீர்கள். அதுவும் சிக்கல்தான், வழக்கமாக சாப்பிடுவதை விட கொஞ்சம் குறைவாக சாப்பிடுங்கள்.

மேலும் கையில் எலுமிச்சை, கிராம்பு, புளிப்பு மிட்டாய் போன்றவற்றினை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் பயணத்தின் போது எண்ணெய் தின்பண்டங்களை சாப்பிடாதீர்கள்.

மேலும் பேருந்தில் அமர்ந்தபின்னர் முன்னோக்கியே வேடிக்கை பாருங்கள், பக்கவாட்டு ஜன்னல் வழியே நகரும் பொருட்களைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு பேருந்து பயணத்தின்போது பேசினால் தலைவலிபோல் ஏற்பட்டு, வாந்தி ஏற்படலாம். மேலும் புத்தகங்கள் படிப்பதைத் தவிர்ப்பது, போன்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Share this story