பச்சை பசேலென்று இருக்கும் சுரைக்காயின் பயன்கள்!

சுரைக்காய் உடலுக்கு நன்மை தரக்கூடியதே. ஆனால் அனைவரும் இதை உணவில் இருந்து ஒதுக்கி விடுகிறார்கள்.
இதில் கொழுப்பு சத்துக்கள் அதிகம் இருப்பதால் தொப்பை மற்றும் உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் உணவில் அதிகம் எடுத்து கொள்ள கூடாது.
இதில் குளிர்ச்சி மிகுந்த நீர் சத்துக்கள் அதிகம் இருப்பதால் சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் அந்நிலையில் சாப்பிட வேண்டாம் மற்ற நேரங்களில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்ட படுவோர் இதை சுரைக்காயின் இலைகளை சமைத்து சாப்பிட நல்ல ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம்.
சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு மிகவும் பயன் உள்ளது தான் இந்த சுரைக்காய். கண் நோய், ரத்தம் கட்டுதல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுவதில் இதன் பங்கு முக்கியாக இருக்கிறது.
உடல் பலவீனத்தை போக்க வேண்டுமா சுரைக்காய் சாப்பிடுங்கள். கோடைகாலத்தில் ஏற்படும் சூடு மற்றும் மன அழுத்தம், பித்தம் போன்றவை நம்மை அணுகாமல் பார்த்து கொள்ளும் சுரைக்காயை பயன்படுத்துங்கள்.
சுரைக்காயின் விதைகள் உடல் எரிச்சலை குறைக்கும், மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும், மூல நோய் வராமல் தற்காத்து கொள்ளும்.