அரசு மரத்தின் பயன்கள்!
Sep 5, 2017, 19:30 IST

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அரசு மரத்தின் இலைகள், வேர்கள், பட்டைகள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டதே.
அரசு மரத்தின் குணங்கள் :
- மரத்தின் வேர்கள் அல்லது பட்டைகளை வெந்நீருடன் கலந்து குடிக்க, அதிகமான உணவு எடுத்து கொள்வதால் ஏற்படும் விக்கல், தொண்டையில் ஏற்படும் சிக்கல்கள் தீரும்.
- அரசு மரத்தில் இருக்கும் காய்ந்த பழங்களை அரைத்து நன்கு தூளாக்கி இரண்டு அல்லது மூன்று வாரங்கள் குடித்து வர மூச்சு திணறல், சுவாச கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
- வேர்களில் இருந்து கிடைக்கும் நீரினை கால்களில் ஏற்படும் பிளவுகள் தழும்புகள் இருக்கும் இடங்களில் பயன்படுத்த நாளடைவில் குணம் ஆகும்.
- அரிப்புகள் ஏற்படும் இடங்களில் அரசு மரத்தின் இலைகளை நன்கு தேய்த்து வர அரிப்புகள் நாளடைவில் குணம் அடையும்.
- அரசு இலைகளில் இருந்து பெறப்படும் மருந்துகள் சருமத்தில் ஏற்படும் அலற்சிகள் மற்றும் அதிகமான வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம், நோய் தொற்றுகள் போன்றவை நம்மை அணுகாமல் பாதுகாக்கும் திறன் கொண்டது.