உலர் திராட்சை பயன்கள்

உலர் திராட்சை பயன்கள்

உலர் திராட்சையில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து போன்ற பல  ஊட்டசத்துகள் உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இந்த உலர் திராட்சை உள்ளது.

இதில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைவதோடு வயிற்று பிரச்சனைகளை தீர்க்க வல்ல மருந்தாகவும் இது உள்ளது.

இதில் உள்ள நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து வயிற்று பகுதிக்கு சென்று நீரை உறிஞ்சுவதால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற இந்த திராட்சை  பயன்படுகிறது.

மேலும் வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைக்கு தீர்வாக இது உள்ளது.

இதில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் காரனமாக இதை தினமும் உட்கொண்டால் இதில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியான ஆற்றலை தந்து உடல் எடையை  அதிகரிக்க செய்கிறது.

மேலும் விளையாட்டு வீரர்கள் உலர் திராட்சையை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் கட்டுக் கோப்பான உடல் அமைப்பைப் பெற முடியும்.

Share this story