Tamil Wealth

ஆண்களின் அழகிற்கும் மற்றும் சருமத்திற்கும் பயன்படுத்த வேண்டியவை!

ஆண்களின் அழகிற்கும் மற்றும் சருமத்திற்கும் பயன்படுத்த வேண்டியவை!

பெண்களை போலவே ஆண்களும் தங்கள் அழகிற்கும் மற்றும் சருமத்திலும் அதிக ஈடுபாடு கொண்டு உள்ளார்கள். ஆண்கள் தங்களை அழகு படுத்தி கொள்ள சில வழிமுறைகளை தெரிந்து கொண்டு பயன் அடையாளம். ஆண்கள் தான் அதிகம் வெளியில் அலைகிறார்கள், வேலை பளு அதிகம் மற்றும் அடிக்கடி வாகனத்தில் செல்லும் பொழுது முகத்தில் அழுக்குகள், தூசுகள், நோய் தொற்றுகள் ஏற்படும். இது சருமத்தை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும்.

ஆண்களின் முக அழகை ஏற்படுத்த உதவும் பொருட்கள் :

செய்முறை 1:

ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து அதன் சாற்றினை மட்டும் தனியே எடுத்து தினம் சாப்பிடுவதின் மூலமும் மற்றும் முகத்திற்கு தினம் பயன்படுத்தவும் நல்ல பலனை காணலாம். சாற்றினை மட்டும் பயன்படுத்தாமல் அதன் தோலில் இருக்கும் சாற்றில் நிறமிகள் அதிகம் இருப்பதால் அதையும் சருமத்தில் இருக்கும் குறைபாடுகளை போக்கும். இதனுடன் கொத்தமல்லி இலைகளை மிக்ஸியில் அரைத்து சாற்றினை எடுத்து கொள்ளுங்கள். இதனை ஆரஞ்சு சாற்றுடன் கலந்து உபயோகிக்கலாம்.

செய்முறை 2:

முல்தானி மெட்டியை பெண்கள் பயன்படுத்துவது போலவே ஆண்களும் பயன்படுத்தலாம். இது அனைவரின் சருமத்திற்கு ஏற்ற வகையில் உருவானது. முல்தானி மட்டியை நீருடன் கலந்து கெட்டியான பதம் வந்தவுடன் முகத்தில் பேசியல் செய்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து நீரினை கொண்டு முகத்தை கழுவுங்கள். எலும்பிச்சை சாற்றினையும் கலந்து பூச சரும கோளாறுகள் நீங்குவதோடு நல்ல சிவப்பழகை கொடுக்கும்.

செய்முறை 3:

உருளை கிழங்கை வேக வைத்து நன்கு மசித்து அத்துடன் மாதுளை பழங்களின் விதைகளை சேர்த்து நன்கு அரைத்து அதனை முகத்தில் தடவ வேண்டும். அதற்கு மேலாக ஐஸ் கட்டியை கொண்டு முகத்தை தடவ வேண்டும். இது முகத்தில் உருவாகும் கரும்புள்ளிகளை மறைக்கும் மற்றும் ஆண்களில் சருமத்திற்கு ஏற்றது, எண்ணெய் கசடுகளை நீக்கும், வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் கோளாறுகளை தடுக்கும், பாக்டீரியாக்களின் தொற்றுகளிடம் இருந்து பராமரிக்கும்.

Share this story