Tamil Wealth

சருமத்தை அழகு படுத்த தினம் இதனை பயன்படுத்துங்கள்!

சருமத்தை அழகு படுத்த தினம் இதனை பயன்படுத்துங்கள்!

சருமத்தை அழகு படுத்த அதிக செலவு பண்ண வேண்டாம், சிரமம் பட வேண்டாம், சுலபமான முறையில் செய்யலாம் ஒரே பொருளை கொண்டு, அது தான் ரோஸ் வாட்டர்.

ரோஸ் வாட்டரில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமது சரும பராமரிப்பில் பெரிதும் பயன் அளிக்க கூடியதாக அமைகிறது.

ஒப்பனை :

சருமத்தின் அழகை கூட்டுவதற்கு தினமும் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தினை கழுவலாம் மற்றும் ஒப்பனை செய்த பின்னர் அதனை நீக்கவும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம், எவ்வித சரும பாதிப்புகளும் வராது.

கருமை நிறம் மாறும் :

முகத்தில் ஏற்படும் கருமை, கழுத்தில் ஏற்படும் கருமை மற்றும் திட்டுகளை போக்க ரோஸ் வாட்டர் உபயோகிக்க கருமை நிறத்தை மறைய செய்து அழகை கொடுக்கும் மற்றும் உதடுகளில் ஏற்படும் வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைத்து கொண்டு, சிவந்த உதடுகளை கொடுக்கும் தன்மை கொண்டது.

பாத வெடிப்புகள் :

கால்களில் இருக்கும் கருமை நிறத்தை நீக்கவும் மற்றும் பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை போக்கவும், பிளவுகளால் ஏற்படும் தழும்புகளையும் குண படுத்தும் ஆற்றல் கொண்டது. வெடிப்புகள் நீங்கி மென்மையான சருமத்தை பெறலாம். இதனுடன் கிளிசரின் கலந்து உபயோகிக்க இன்னும் பலனே.

சருமத்துளைகள் :

சருமத்தில் இருக்கும் துளைகளை சுத்தப்படுத்தி அழகை கூட்டும் மற்றும் பரு, மருகளால் ஏற்படும் தழும்புகளை நீக்கும், கரும் திட்டுகள், எண்ணெய் சுரப்பிகளை நீக்கும்.

அலற்சி :

சருமத்தில் ஏற்படும் அலற்சியால் ஏற்படும் அரிப்புகள், எரிச்சல், சிவப்பு நிற திட்டுகள் மறைந்து முகத்தை பளிச்சென்று வைத்து கொள்ளும்.

ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் :

ரோஸ் வாட்டரில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் முகத்திற்கு வழு வழுப்பை கொடுத்து நல்ல பொலிவை கொடுக்கும்.

Share this story