உடல் எடையை குறைக்க உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறை!
பொதுவாக நம் எல்லோரிடமும் பொதுவான கருத்து உள்ளது. உருளைக் கிழங்கை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கவும் முடியும். உடல் எடை குறைக்கவும் முடியும். இதற்கு வழி அதை பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது.
உடல் எடையை குறைக்க உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறை:-
உருளைக் கிழங்கை எண்ணெயில் பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிட்டால் உடலின் எடை அதிகரிக்கும். உருளைக் கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் உடலின் எடையை வெகு விரைவில் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தாலே போதும் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மூட்டு வலி, போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து யோகர்டை அதனுடன் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை இரவு உணவாக இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் உடல் எடை எளிதில் குறையும்.
உருளைக் கிழங்கை சாப்பிடுவதால் இதயம் சம்மந்தமான நோய்கள், குழந்தையின்மை, புற்று நோய் போன்றவை வராமல் பார்த்து கொள்ள முடியும். உருளைக் கிழங்கில் அதிகப்படியான வைட்டமின் – சி, பொட்டாசியம், புரோட்டீன் போன்றவை அடங்கி இருக்கும்.