முடி வளர்ச்சிக்கு உகந்த வேதி பொருட்களை பயன்படுத்த வேண்டும்!

ஒவ்வொருத்தரின் முடிகளும் வித்தியாசமான தோற்றத்திலும் மற்றும் மாறுபட்ட பண்புகளையும் கொண்டது.
பின்பற்ற வேண்டிய முறைகள் :
குளித்து முடித்த பிறகு ஈரம் போக வேண்டும் என்று எண்ணி முடிகளை இறுக்கமாக கட்டி வைக்கிறார்கள். அப்படி செய்தால் ஈரம் அனைத்தும் தலை வழியே உள் சென்று தலை வலியை ஏற்படுத்தும், சளி, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற கோளாறுகள் வரும்.
ஷாம்பு பயன்பாடு :
தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை போதுமான அளவே பயன்படுத்துவது நல்லது. அதிகம் உபயோகித்தால் அதில் இருக்கும் வேதி பொருட்கள் முடி வளர்ச்சியை பாதித்து, முடி உதிர்வையும் ஏற்படுத்தும்.
தேங்காய் எண்ணெய் :
முடிக்கு எண்ணெய் வைத்து குளிக்க குளிர்ச்சியை பெற்று முடி வளர்ச்சியும் பெறும்.
தினம் தலைக்கு எண்ணெய் வைப்பதால் முடி உதிர்வு குறைந்து பொடுகு தொல்லைகள் நீங்கும்.
ஈரத்தை உலர்த்துவது :
ஈர தலையுடன் இருக்காமல் உடனே காய வைக்க வேண்டும். அதற்கும் மின்சார பொருட்களை பயன்படுத்த கூடாது. காற்றிலோ அல்லது வெயிலிலோ காய வைப்பதே நல்லது.