சாப்பிட்டபின் செய்யக்கூடாத செயல்கள் எவை?

சாப்பிட்டபின் சில செயல்களை நாம் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் நமது உடலில் பல விதமான பிரச்சினைகள் ஏற்படக் கூடும். சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்களாக நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சில விஷயங்களைக் கூறுவதுண்டு. ஆனால் நாம் அவற்றினை மூட நம்பிக்கை என்று எண்ணி தட்டிக் கழிப்பதும் உண்டு.
ஆனால் பெரியோர்கள் கூறும் அந்த விஷயங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய அறிவியல் உண்மைகள் உள்ளது. அவை குறித்து நான் உங்களுக்கு சொல்கிறேன்.
1. சாப்பிட்ட பின் தூங்கினால், நமது உடலில் செரிமானமானது சீராக நடைபெறாது.
2. சாப்பிட்ட பின் நடந்தால், நமது உணவில் உள்ள சத்துகள் உணவு மண்டலத்தினால் உறிஞ்சப்படாமல் போய்விடும்.
3. சாப்பிட்ட பின் இடுப்பில் உள்ள துணியைத் தளர்த்தினால், குடல் இறக்கம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
4. சாப்பிட்ட பின் குளித்தால், நமது உடலின் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனாலும் செரிமானப் பிரச்சினைகள் கட்டாயம் ஏற்படும்.
5.அதேபோல் சாப்பிட்ட பின் தேநீர் குடித்தல், பழங்கள் சாப்பிடுதல் போன்ற செய்கைகளையும் தவிர்த்தல் நல்லது.