உடல் எடையினைக் குறைக்க சாப்பிட வேண்டிய காலை உணவுகள்!!

உடல் எடையினைக் குறைப்பதில் காலை உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. பெரும்பாலும் உடல் எடையினைக் குறைக்க நினைக்கும் பலரும், காலை உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் அவ்வாறு செய்வது தவறான ஒன்றாகும், காலை உணவினைத் தவிர்க்கும் பழக்கம் மதிய இடைவெளி நேரங்களில் உங்களை அதிக அளவு ஸ்நாக்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வழி வகுக்கும். இதனால் காலை உணவினைத் தவிர்க்காதீர்கள்.
எந்தமாதிரியான காலை உணவுகள் உடல் எடையினைக் குறைக்கும் என்பது குறித்து நாம் இப்போது பார்க்கலாம். காலை உணவாக வேகவைத்த முட்டையினை எடுத்துக் கொள்ளுங்கள். முட்டை பசி உணர்வினைக் குறைப்பதால், உங்கள் உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும்.
அதேபோல் பழங்கள், பழச் சாறுகள் எடுத்துக் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
மோர் அல்லது தயிர் சாதத்தினை காலை உணவாக சாப்பிட்டால், பசி உணர்வு ஏற்படுவது தாமதமாகும். அதேபோல் காலை உணவாக முளைக் கட்டிய பயறு வகைகளை எடுத்டுக் கொள்ள வேண்டும்.
அதேபோல் காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் ஓட்ஸினை பாலுடன் கலன்டு சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் பாலில் கொழுப்புச் சத்து உள்ளது.