சுடு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா?

உடல் எடையினைக் குறைக்க கேட்டது, படித்தது, பார்த்தது எனப் பலவகையான டிப்ஸ்களை நாம் பின்பற்றி இருப்போம். ஆனால் அதிக அளவில் செலவு செய்யாமல், ரொம்பவும் சிரமப்படாமல் உடல் எடையினைக் குறைக்கும் ஒரு வழி உண்டு. அது வேறு எதுவுமில்லை நம் வீட்டில் இருக்கும் தண்ணீர்தான். என்னது தண்ணீர் உடல் எடையினைக் குறைக்குமா? எங்களை முட்டாளாக்க வேண்டாம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி தண்ணீர் நம் உடல் எடையினைக் குறைக்கும் தன்மை கொண்டது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். தண்ணீரை நீங்கள் லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால், உங்கள் உடல் பருமன் குறைவதை உங்களால் உணர முடியும்.
அதாவது வெதுவெதுப்பான நீர் ஆனது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கக் கூடியதாகவும், உணவுப் பொருட்களை அதி வேகத்தில் சீரணமடையச் செய்வதே இதற்கு காரணமாகும்.
அதனால் உடல் எடையினைக் குறைக்க நினைக்க எவரும் சாதாரண நீர் குடிப்பதை விடுத்து சுடுநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உணவு சாப்பிட்ட பின்னர் சுடுநீர் குடித்தல், இரவு உறங்கச் செல்லும் முன் சுடுநீர் குடித்தல் உடல் எடையினை விறுவிறுவென குறையச் செய்யும்.