ஒவ்வாமையை உண்டு பண்ணுமா நட்ஸ் வகைகள் ?

நட்ஸ் அதிகம் சாப்பிட கிடைக்கும் ஆரோக்கியம் போலவே அது ஏற்படுத்தும் ஒவ்வாமை பிரச்சனையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வாமை பிரச்சனை :
தினமும் சாப்பிடும் நட்ஸ் வகைகள் சில நேரங்களில் சருமத்தில் அரிப்புகள், ரத்த கட்டுதல் போன்றவை வர கூடும். பாதித்த இடங்களுக்கு உகந்த மருந்துகளை பயன்படுத்துங்கள்.
நீங்கள் தினம் உட்கொள்ளும் நட்ஸ் வகைகள் திடீர் என்று வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தி வயிற்றில் எரிச்சல், புண்கள், வாந்தி போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் நீங்கள் அதிகம் உட்கொள்ளும் நட்ஸ் வகைகள் தான்.
நட்ஸ் கூட சேர்ந்த கடலைகளை அதிகம் உண்ண அது ஒத்துக்கொள்ளாமல், தலை சுத்தல், வாந்தி ஏற்படும் நிலை, வயிற்று போக்கு, குமட்டல் உண்டாகலாம், எந்த உணவை சாப்பிடும் பொழுதும் நேராக அமர்ந்து உண்ண வேண்டும். படுத்து கொண்டோ, சாய்ந்து கொண்டோ சாப்பிட்டால் அது வாயு தொல்லையை ஏற்படுத்தும் மற்றும் வலிகளை உண்டாக்கும்.
நட்ஸ் உண்டாகும் குறைபாடு :
அதிகம் இருக்கிறது என்று ஆசையில் அதிகம் உட்கொள்ள உங்கள் தொண்டையில் வறட்சி ஏற்படும் மற்றும் உட்கொள்ள உட்கொள்ள சிலருக்கு மூக்கில் இருந்து நீர் வடிந்தால் அவர்களுக்கு நட்ஸ் ஒத்துக்கொள்ள வில்லை என்று அர்த்தம்.
குழந்தைகள் கடலை சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுகள் :
குழந்தைகளுக்கு சத்து என்று அதிகம் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். நட்ஸ் வகைகள் கடலை, பாதாம் பருப்பு போன்றவைகளை அதிகம் உட்கொள்ள ஏற்படும் குறைபாடுகளால், பக்க விளைவுகளும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.