வயதானதால் ஏற்படும் சுருக்கங்களை போக்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

சிலருக்கு சிறு வயதிலே முகத்தில் சுருக்கங்கள். கோடுகள் உருவாகி வயது முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கும், இதனால் அவர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாக்குகிறார்கள். இந்த நிலை பெண்களுக்கு மட்டுமல்லாம் ஆண்களையும் அதிகம் பாதிக்கும். இதற்கு என்ன செய்யலாம் என்று தெரியாமல் இருக்கிறீர்களா, அதற்கான சில வழிமுறைகளை சொல்கிறேன் கேளுங்கள், இதை படியுங்க ட்ரை பண்ணுங்க பயனை பாருங்க.
முட்டையின் வெள்ளை கரு :
வயதான தோற்றத்தை போக்க உதவும் முட்டையின் வெள்ளை கருவை எப்படி பயன்படுத்தலாம் பார்க்கலாமா! இது தான் எளிய முறையாகவும் கருத படுகிறது.
#1
முல்தானி மட்டியை கொண்டு சருமத்தில் உருவாகும் வயது முதிர்ந்த தோற்றத்தை போக்கலாம் வாங்க !
முல்தானி மட்டியை பெண்கள் மட்டுமே உபயோகிக்கலாம் என்று இல்லை, ஆண்களும் இதனை சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் பயன்படுத்த இளமையான தோற்றத்தை பெறுவார்கள்.
கடைகளில் விற்பனை ஆகும் முல்தானி மெட்டியை நீருடன் கலந்து பேஸ்ட் தயாரித்து சருமத்தில் எல்லா இடத்திலும் பயன்படுத்தி அரை மணி நேரம் கழித்து நீரினை கொண்டு கழுவ வேண்டும், இந்த பேஸ்ட் உடன் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்.
#2
முட்டை மயோனீஸ் கொடுக்கும் அழகு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகத்தை எப்பொழுதும் சுத்தமுடன் வைத்து கொண்டு, மென்மையான சருமத்தை கொடுத்து, எப்பொழுதும் பொலிவை கொடுத்து அழகான தோற்றத்தை கொடுக்கும், இதனை சருமத்திற்கு பயன்படுத்துங்கள், இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
#3
முட்டை கோஸ் சருமத்தை பராமரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா!
முட்டை கோஸை நன்கு அரைத்து கொள்ளுங்கள், அதனை சருமத்தில் அப்படியே பயன்படுத்த முகம் நல்ல பொலிவை கொடுக்கும் மற்றும் அதனுடன் பாதாம் எண்ணெய், தேன், எலும்பிச்சை போன்றவை கலந்தும் உபயோகிக்க சருமம் எப்பொழுதும் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளும்.
#4
ஒரு முட்டையை எடுத்து கொள்ளுங்கள், அதனை உடைத்து மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளை கருவை மட்டும் எடுத்து அதனை கலக்கி கொள்ளுங்கள். இதனை மட்டும் முகத்தில், கை, கால்களில் தேய்த்து 20 முதல் 25 நிமிடங்கள் கழிந்த பின்னர் நீரினை கொண்டு கழுவி விடுங்கள்.