உடல் பருமனை குறைக்க நேரம் மிகவும் அவசியம் தெரியுமா உங்களுக்கு !

உடல் எடையை குறைக்க நேரத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பது தெரியுமா உங்களுக்கு, தெரிஞ்சிக்கோங்க!
சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதேப்போலவே நேரத்திற்கு நீங்கள் செய்யும் டயட் உங்கள் எடையை குறைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உணவு நேரம் காலை 8 மணிக்கு ஆரம்பித்தால் 4 மணி வரை இருக்க வேண்டும், மீத நேரம் அனைத்தும் எந்த உணவுகளையும் எடுத்து கொள்ள கூடாது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை சாப்பிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் சீராக இருக்கும், சாப்பிடாமல் இருக்கும் மீத நேரத்தில் கலோரிகள் எரிக்க படும். இதனை மேற்கொண்டு பாருங்கள்.
நீங்கள் சாப்பிடும் அந்த 8 மணி நேரத்திலும் அதிக கொழுப்புகள் இருக்கும் உணவுகளையே அதிகம் எடுத்து கொள்ள கூடாது. ஆரோக்கியத்திற்கும், எடையை குறைக்க உதவும் உணவு பொருட்களையே சாப்பிட வேண்டும். கலோரிகள் இருக்கும் உணவுகளையே எடுத்து கொண்டால் இந்த முறையை செய்து பயன் இல்லை. உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சாப்பிடும் நேரத்தையும் குறைக்க வேண்டும் மிகவும் அவசியமானது.
குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை உண்ணுவது அவ்வளவு எளிது அல்ல, உடல் எடையை கட்டாயம் குறைத்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் மேற்கொள்ளுங்கள்.
இந்த டயட்டை மேற்கொண்டதோடு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதும் இன்னும் நல்ல பலனை கொடுக்கும். இந்த டயட்டை மேற்கொள்பவர்கள் குறைந்த கார்போ உணவுகளும், அதிக புரத உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும், மிகவும் கட்டுப்பாடு வேண்டும்.