Tamil Wealth

தலைவலிக்கு இதில் ஏதாவது நிச்சயம் உங்களுக்கு தீர்வு அளிக்கும்!

தலைவலிக்கு இதில் ஏதாவது நிச்சயம் உங்களுக்கு தீர்வு அளிக்கும்!

இன்றைய காலக்கட்டத்தில் அதிகப்படியான வேலைப்பளு, நிம்மதியின்மை காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. இதற்கு பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அது தீர்வாக இருந்தாலும் நாள் போக்கில் பல பின் விளைவுகளினை ஏற்படுத்தும். அதற்கு மாறாக வீட்டில் உள்ள சில இயற்கை பொருள்களை பயன்படுத்தி தலைவலியை எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

  • கொத்தமல்லி இலையை அரைத்து நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் அடிக்கடி தலைவலி ஏற்படுவது குறையும்.
  • கிராம்பை அரைத்து பசை போல் மாற்றி அதை லேசாக சூடேற்றி நெற்றியில் தடவினால் தலைவலி உடனே குணமாகும்.
  • 30 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து அதை வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குணமாகும்.
  • குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பசையாக்கி நெற்றியில் தடவினால் தலைவலி மறையும்..
  • வெற்றிலையை இதமாக சூடேற்றி நெற்றியில் சிறிது நேரம் வைத்தால் தலைவலி குணமாகும்.
  • பட்டையினை பொடியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கொள்ள வேண்டும் பின்பு நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
  • இஞ்சியை கொதிக்க வைத்து அந்த நீரில் தேன் கலந்து சாப்பிட தலைவலியை வராமல் தடுக்கலாம்.

Share this story