Tamil Wealth

வேர்க்கடலையானது கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படக் காரணம் இதுதான்!!

வேர்க்கடலையானது கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படக் காரணம் இதுதான்!!

வேர்க்கடலை சாப்பிடுவதை உடல் எடை கூடிவிடுமோ என்று நினைத்து தவிர்க்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்படித் தவிர்ப்பதை இதைப் படித்தவுடன் நீங்கள் நிறுத்தி விடுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். அதாவது வேர்க்கடலையானது கொழுப்பு அதிகமாகக் கொண்டதாகவும், அதனால் உடல் எடையானது அதிகரிக்கும் என்றே பலரும் எண்ணுகின்றனர்.

ஆனால் வேர்க்கடலையானது, உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளைக் கொண்டதாக உள்ளது. அதாவது இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்பினை சேர்க்கிறது, அதனால் உடல் எடை கூடிவிடுமோ என்று நினைத்து யாரும் வேர்க்கடலையினை சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

மேலும் வேர்க்கடலையில் புரதமானது அதிக அளவில் உள்ளது, இதனால் முடி உதிர்தல், தலைமுடி வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கின்றது. தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் சரி, புரதச் சத்து குறைபாடு உள்ளவர்களும் வேர்க்கடலையினை வாரம் மூன்று முறை என்ற அளவில் எடுத்துக் கொண்டால் புரதச் சத்தின் அளவு அதிகமாகும்.

மேலும் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் உள்ளது, மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு நிலக்கடலையினைப் பரிந்துரைப்பதுண்டு, அதற்குக் காரணம் அதில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதும், புரதச்சத்து அதிகம் இருப்பதும்தான்.

Share this story