இதய நோய்களை தவிர்க்க நாம் சிந்திக்க வேண்டியவை!

இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ரத்த அழுத்தம் மற்றும் நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும்.
உடல் பருமன் :
அதிக உடல் பருமனை கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது. அவர்களின் உடலில் இருக்கும் பி எம் ஐ 18-25 வரைதான் இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் இதய கோளாறுகளை ஏற்படுத்தும். அதிக பருமன் உடையவர்களுக்கு 25 முதல் 30 வரை இருப்பதே சம நிலை, அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவு :
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் மற்றும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் சர்க்கரையால் ரத்தத்தில் அளவு அதிகரிக்காமல் சம நிலையில் இருக்கும் படி வைத்து கொள்ள வேண்டும். ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் ஏ1சி அளவை பொறுத்தே அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கணக்கிடும் மற்றும் சர்க்கரையை வியாதி இருக்கிறதா என்பதையும் கண்டறியும்.
இதய துடிப்புகள் :
நமது இதய துடிப்புகள் சீராக அமைய வேண்டும். அதில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சாதாரணமாக விட கூடாது, விட்டால் அது பெரிய விளைவை ஏற்படுத்தும், உயிருக்கு ஆபத்தாக முடியும்.
கொழுப்புகள் :
உடலில் அதிகமான கெட்ட கொழுப்புகள் சேருவதை தடுக்க வேண்டும், ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகள் ரத்த கொதிப்பை 130க்கு மேல் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கொழுப்புகள் அனைத்தும் வயிற்றில் சேருவதால் தொப்பை ஏற்படும் மற்றும் இடுப்பின் அளவு அதிகரிக்கும்.