Tamil Wealth

நீச்சல் அடிக்கும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டியவை!

நீச்சல் அடிக்கும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டியவை!

நீச்சல் அடிக்க துவங்கும் பொழுது அந்த நீரினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதை தெரிந்த பின்னர் அந்த நேரில் இருக்கும் குளோரினின் அளவை பரிசோதித்து பின்னர் அதில் இறங்குங்கள்.

குளோரின் அளவை பார்க்க வேண்டும் :

நீங்கள் எந்த நீரில் நீந்த ஆசைப்பட்டாலும் முதலில் சோதிக்க வேண்டியது அந்த நீரின் குளோரின் அளவு தான். அது அதிகம் காண பட்டால் நீரில் குதிக்க வேண்டாம். உடல் உபாதைகளை ஏற்படுத்தும் சருமத்தில் கோளாறுகளை உண்டுபண்ணுவதோடு, நீர் கண்ணில் சென்றால் கண்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வாயில் செல்லும் நீரினை விழுங்க அதனால் சில விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கண்களின் பாதுகாப்பு :

எந்த நீரில் இறங்குவதற்கு முன்பும் கண்களின் பாதுகாப்பிற்கு கண் கியரை அணிந்தே நீச்சல் அடியுங்கள். அது உங்கள் கண்களை எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் பாதுகாக்கும் உறையாக பயன்படும்.

மறுபடியும் குளிக்க வேண்டும் :

நீச்சல் அடித்த பின்னர் வேறு நீரில் ஒரு முறை குளிக்க வேண்டும். நம் உடலில் இருக்கும் குளோரினை நீக்கி தூய்மைப்படுத்தும். இதனால் நமக்கு ஏற்படும் சரும கோளாறுகளை தடுக்கும் மற்றும் உடல் உபாதைகளையும் தடுக்கும்.

தண்ணீர் அவசியம் :
நீச்சல் அடிக்கும் பொழுது சிறிது நேரத்தில் உடல் சோர்வை காணும். அதற்கு நீச்சல் அடிக்கும் முன்பே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அது நீண்ட நேரம் நீரில் நீந்த உதவி புரியும்.

 

 

Share this story