Tamil Wealth

ரத்த தமனிகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டியவை? தெரிந்து கொள்ளலாமா!

ரத்த தமனிகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டியவை? தெரிந்து கொள்ளலாமா!

இதய நோய்களால் அதிக பேர் பாதிக்க படுகிறார்கள். ரத்த ஓட்டம் சீராக செயல் பட உதவும் தமனிகளின் பராமரிப்பு மிகவும் முக்கியமே.

ஆரோக்கியம் கொடுக்கும் தானிய வகைகள் :

கோதுமை
கம்பு
சோளம்
பார்லி
ராகி

மேற்கூறியவைகளை உட்கொள்வதால் தமனிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ரத்த ஓட்டத்தை சீராக அமைக்கும் மற்றும் இதயத்திற்கு எந்த கோளாறுகளையும் ஏற்படுத்தாது. இதில் அடங்கி இருக்கும் ஊட்ட சத்துக்கள் எலும்புகளுக்கும் வலுவை கொடுத்து சிறப்பாக செயல் பட செய்கிறது.

அதிக கொழுப்பு :

ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு அதிகமான கொழுப்புகள் சேருவது இல்லை, மடிக்கணினியில் வேலை செய்வபர்கள் மற்றும் உட்கார்ந்த நிலையிலே வேலை செய்பவர்கள் கொழுப்புகள் மூலம் ஏற்படும் இதய நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.

ரத்த தமனிகளில் ஏற்படும் கோளாறுகளுக்கு காரணமே நாம் உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் தமனிகளில் சென்று சேருவதே. இது மாரடைப்பை கூட ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதயத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கொழுப்புகள் ரத்தத்தில் சேருவதை கட்டு படுத்த உதவும் இஞ்சி, இது தமனிகளில் சேரும் அதிகமான கொழுப்புகளால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் கொழுப்புகளை கரைக்கவும், தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டும் அதற்கு இணையாக பயன்படுகிறது. இஞ்சி உடலில் உள் உறுப்புகளில் ஏற்படும் வலிகள் மற்றும் வீக்கங்களை குண படுத்தும் அருமையான மருந்து.

கொழுப்பு உருவாக காரணம் ட்ரிகிளிசெரைடு :

ட்ரிகிளிசெரைடு குறைய, வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் பொடிகளில் இருக்கும் சத்துக்கள் உதவுகின்றன. இலவங்க பட்டையில் இருக்கும் சத்துக்கள் தமனிகளில் அதிகமான கொலஸ்ட்ரால் தங்குவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

Share this story