உருளைக்கிழங்கில் உள்ள சத்துகள் இவைகள்தான்!!

உருளைக் கிழங்கினைச் சாப்பிட பலரும் பொதுவாகத் தயங்குவர், காரணம் அது உடல் எடையினைக் கூட்டும் என்பதாலும் வாயுத் தொல்லையினை ஏற்படுத்தும் என்பதாலும்தான்.
ஆனால் உருளைக் கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். உடல் மெலிந்து போய் இருப்பவர்கள், புரதச் சத்து மற்றும் கார்போஹைட்ரேட் சத்து குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகள் உருளைக் கிழங்கினை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும் இதனை வறுத்து சாப்பிடுவதையே பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் உருளைக் கிழங்கினை வறுத்து சாப்பிடுவதைக் காட்டிலும் வேகவைத்து சாப்பிடுவது நல்லது. மேலும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு உருளைக் கிழங்கினை வேகவைத்துக் கொடுத்து சாப்பிட வைத்தல் வேண்டும்.
மேலும் உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கின் தோலினை உரித்து சாப்பிடுதல் வேண்டும், ஆனால் இதில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட்டின் காரணமாக உருளைக் கிழங்கினை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளுதல் கூடாது.
மேலும் உருளைக் கிழங்கினை சாப்பிடுவதற்கு மட்டுமல்லாது, அழகினை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். அதாவது ஹேர்பேக், ஃபேஸ் மாஸ்க் என என நாம் அழகினை மெருகேட்டவும் பயன்படுத்தலாம்.