Tamil Wealth

புதினாவில் உள்ள மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!
 

புதினாவில் உள்ள மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

புதினாவானது ஒரு கட்டு ரூ.10 என்ற அளவில் சந்தைகளில் கிடைப்பதாகும்,  இதனை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றில்லை. ஒருமுறை வாங்கிப் பயன்படுத்திய பின்னர் அதன் குச்சிகளை தூக்கி எறியாமல் ஒரு குவளையில் நட்டுவைத்தால் போதும் புதினாக் கீரை காசு கொடுத்து வாங்காமல் வீட்டிலேயே அறுவடை செய்து சாப்பிடலாம்.

இதன் மருத்துவ குணங்கள் குறித்துப் பார்க்கலாம். 45 வயதிற்கும் அதிகமானோர் செரிமானப் பிரச்சினைகளால் அவதியுற்றால் நிச்சயம் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

புதினாவில் நாம் சட்னி, டீ, ஜூஸ் போன்ற ரெசிப்பிகளை செய்ய முடியும். மேலும் சிக்கன், மட்டன் என அசைவ உணவுகளில் புதினாவை சேர்க்க காரணம் அதன் செரிமான சக்தியால்தான். மேலும் உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் புதினாவை கட்டாயம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

புதினா டீ அல்லது ஜூஸ் குடல் புழுக்களை காணாமல் போகச்செய்கின்றது, இதனால் குழந்தைகளுக்கு ஒரு கால் டம்ளர் அளவில் அவ்வப்போது கொடுத்தல் நல்லது. மேலும்  சளித் தொல்லை பிரச்சினை உள்ளவர்கள் ஜூஸாகவோ அல்லது டீயாகவோ குடிக்கலாம்.
 
ஆஸ்துமா, சைனஸ், மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள் புதினா இலையினை மென்று சாப்பிடலாம். மேலும் இது ஆரோக்கிய பானமாக இருப்பதால், வெறும் தண்ணீரில் புதினா இலையினைப் போட்டு வைத்து தினசரியும் நாம் குடிக்கலாம்.


 

Share this story