தயிரின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

பொதுவாக நாம் சாப்பிடும்போது முதலில் குழம்பு அடுத்து ரசம், கடைசியாகத் தயிர் என்ற வரிசையில் சாப்பிடுவோம். அதாவது தயிரானது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது. இதனால்தான் கடைசியாக தயிரினைச் சாப்பிடுவார்கள்.
தயிர் இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதாகவும், மேலும் பக்கவாதப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருந்து வருகின்றது. மேலும் தயிரில் உள்ள நன்மை விளைவிக்கும் பாக்டீரியாவானது செரிமானத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள் எந்த அளவு தயிரினை எடுத்துக் கொள்கிறார்களோ அந்த அளவு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் தயிர் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.
மேலும் தயிர் மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த தீர்வினைக் கொடுப்பதாகவும் உள்ளது. மேலும் மலக்குடலில் ஏற்படும் எரிச்சல், அல்சர் என்னும் குடற்புண் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த ரிசல்ட்டினைக் கொடுப்பதாய் இருக்கும்.
தயிர் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குவதாகவும் சிறப்பானதாக உள்ளது. மேலும் தயிரானது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
குழந்தைகளுக்கு குடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தயிரினைக் கொடுத்தால் உடனடியாக நிவாரணம் பெறுவார்கள்.