Tamil Wealth

மிளகின் மருத்துவ குணங்களின் நன்மைகள் இவைகள்தான்!!
 

மிளகின் மருத்துவ குணங்களின் நன்மைகள் இவைகள்தான்!!

மிளகு நம் உணவில் இருக்கும் முக்கியப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சைவக் குழம்புகளில் மிளகு இடம்பெறாமல் போனாலும் அசைவ உணவு வகைகளில் நிச்சயம் மிளகு நிச்சயம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இத்தகைய மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

மிளகு முதல் கட்டமாக செரிமானப் பிரச்சினைகளை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றது. செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதில் மிளகை மிஞ்ச எந்தப் பொருளையும் சொல்ல முடியாது. மேலும் சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் பாலில் மிளகினைப் போட்டு குடித்தால் பிரச்சினை உடனடியாகச் சரியாகும்.

மேலும் வறட்டு இருமலுக்கு என்ன மருந்து எடுத்தும் பயனில்லை என்று நினைப்பவர்கள் முட்டையுடன் கூடுதலாக மிளகு சேர்த்து பொரித்து சாப்பிட்டால் வறட்டு இருமல் பிரச்சினை சரியாகும்.

மேலும் மிளகு தொண்டை வலி, தொண்டை வீக்கம், தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது. 

மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் மிளகில் டீப் போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். மேலும் குழந்தைகளின் உணவில் மிளகாய்த் தூளுக்கு பதிலாக மிளகினை சேர்த்தால் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும்.
 
மேலும் வெறுமையாக வாயில் போட்டு தினசரி காலை மாலை என்ற அளவில் மென்று வந்தால் பற்கள் வெண்மையாகும். பற்களின் உறுதியும் அதிகரிக்கச் செய்யும்.


 

Share this story