ஆரஞ்சுப் பழத்தில் உள்ள நன்மைகள் இவைகள்தான்!!

ஆரஞ்சுப் பழமானது வைட்டமின் சி சத்தினைக் கொண்டதாக உள்ளது. வைட்டமின் சி ஆனது இரும்புச் சத்தினை உடலில் உட்கிரகிக்கப் பயன்படுகிறது. மேலும் ஆரஞ்சுப் பழமானது, புற்றுநோயைத் தடுக்கக்கூடியதாக உள்ளது. மேலும் ஆரஞ்சுப் பழமானது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினைக் கரைப்பதாக உள்ளது.
மேலும் சிட்ரஸ் பழங்களானது, உடலின் செரிமான சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது, இதனால் குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழத்தினை தினமும் கொடுக்கவும் செய்யலாம். அதேபோல் தினமும் வயதானோரும் ஒரு ஆரஞ்சுப் பழத்தினை எடுத்துக் கொண்டால் சீரண சக்தி மேம்படும்.
ஆரஞ்சுப் பழ ஜூஸை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும், தூக்கமின்மை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் ஆரஞ்சுப் பழம் சிறந்த தீர்வாக இருக்கின்றது.
மேலும் இது உடலின் இரத்த அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதால், தலைமுடி உதிர்வு, இரத்த சோகை, தோல் சுருக்கம், வறண்ட சருமம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கின்றது.
இனி ஆரஞ்சுப் பழத்தினை தினமும் 1 என்ற அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.