நாம் நல்லது என செய்யும் செயல்களில் கூட சில தீமைகள் இருக்கிறது!
Oct 1, 2017, 12:45 IST

நாம் தினம் செய்யும் செயல்களில் நமக்கு நன்மைகள் என நினைத்து தவறான செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். அதனை தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
தவறுகள் :
- சிறு குழந்தைகளின் பற்களில் இருக்கும் கிருமிகள் எளிதில் செல்வது இல்லை, அவர்கள் பற்களை துலக்கவே மாட்டார்கள். ஆகவே அவர்களை அவ்வப்போது கண்டிப்பாக மருத்துவரிடம் அழைத்து சென்று சோதிக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
- உணவுகளை சாப்பிடும் பொழுது சிலர் ஒரு பக்கமாக வைத்து கொண்டு அசை போடுவார்கள். இது அவர்களுக்கு பற்களில் கூச்சம், வலிகள், பற்சொத்தை போன்ற கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகவே உணவுகளை சம நிலையில் இரு புறமும் வைத்து நன்கு மென்று சாப்பிடுங்கள்.
- பற்களில் இருக்கும் மேடுபள்ளங்களை போக்கவும் மற்றும் முன்னுக்கும் பின்னுக்குமாக முரண்பாடுகளை கொண்ட பற்களை சரி செய்ய மருத்துவரின் ஆலோசனை படி எடுத்து கொள்ளும் டென்டல் ப்ரேஸ், நீங்கள் சிரிக்கும் பொழுது உங்கள் அழகை கெடுக்கும், அதற்கு பதிலாக பற்களிற்கு பின் உபயோகப்படுத்தும் டென்டல் ப்ரேஸ் பயன்படுத்துங்கள்.
- மருத்துவரின் ஆலோசனை என்பது மிக முக்கியம் அது உங்கள் பற்களை மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் நல்லது. அவ்வப்போது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பற்களில் ஏற்படும் மஞ்சள் கறைகளை போக்கவும் அவரின் அறிவுரைகளை கேளுங்கள்.
பற்களில் ஏற்படும் குறைகளை போக்க உதவும் உணவுகள் :
பால் உணவுகள்
பழங்கள்
காய்கறிகள்
நட்ஸ்
பயிறு
மீன்
பீன்ஸ்
மேற்கூறிய உணவுகளில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், புளோரின் போன்றவைகள் இருப்பதால் பற்களின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் பற்களில் ஏற்படும் குறைபாடுகளை போக்கவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.
பற்களை துலக்கும் பொழுது அதிகம் சுத்தம் செய்கிறோம் என்று எண்ணி அதிக அழுத்தத்தை கொடுப்பார்கள், அது மிகவும் தவறானது. மெதுவாகவே தேய்க்க வேண்டும், அதிக அழுத்தத்தை கொடுத்தால் ஈறுகளில் ரத்த கசிவுகள் ஏற்படும்.