Tamil Wealth

பவுடர் அழகை கொடுக்க உதவுமா தெரிஞ்சி பயன்படுத்தலாம்!

பவுடர் அழகை கொடுக்க உதவுமா தெரிஞ்சி பயன்படுத்தலாம்!

நமது அழகை கூட்ட வேண்டும் என்று நினைத்து கடைகளில் விற்பனை ஆகும் எல்லா பொருட்களையும் வாங்கி பயன்படுத்தும் ஆர்வம் இன்று பலரிடத்தில் காண படுகிறது.

டிப்ஸ் :

  • சுப நிகழ்ச்சிகளுக்கோ அல்லது வெளியே செல்லும் பொழுது அவசரமாக கிளம்பனும் என்றால் தலையில் இருக்கும் எண்ணெய் உங்கள் அழகை கெடுகிறது என்றால் உடனே தலைக்கு குளிக்க வேண்டும் என்று இல்லை. பவுடரை தலையில் கொஞ்சம் தேய்த்து விட்டு சென்றால் அது விரைவில் தலையில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சி விடும்.
  • உடைகளின் மூலம் உடலில் ஏற்படும் அரிப்புக்களை போக்கவும் டால்கம் பவுடர் பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
  • வேக்சிங் செய்வதற்கு முன் பவுடர் உபயோகிக்க வலிகள் இருக்காது.
  • உதடுகளை அழகு படுத்த உபயோகப்படுத்தும் பொருட்களை பயன்படுத்திய பின்னர் அதன் மேல் கொஞ்சம் டால்கம் பவுடரை தேய்க்கலாம், இது உங்கள் உதடுகளில் இருக்கும் சாயத்தை நீண்ட நேரத்திற்கு வைத்து உங்களை அழகு படுத்தும்.
  • சருமத்திற்கு பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களும் பயன்படுத்திய பின்னர் சிறிதளவு டால்கம் பவுடர் பயன்படுத்தினால் எப்பொழுதும் அழகுடன் காட்சி அளிப்பீர்கள்.
  • ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் உடலில் இருக்கும் தூசுகள் மற்றும் மணலை நீக்க அவர்களுக்கு டால்கம் பவுடர் தேய்த்து விட உடலில் இருக்கும் மணல் விழுந்து விடும் மற்றும் வியர்வையின் மூலம் ஏற்படும் எரிச்சலை போக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
  • துணிகளில் அல்லது உபயோகிக்கும் பொருட்களில் இருக்கும் வியர்வை நாற்றத்தினை போக்க பவுடர் பயன்படுத்த ஈரப்பதத்தை உறிஞ்சி நறுமணத்தை கொடுக்கும்.

 

Share this story