மூக்கு தான் மூச்சே கவனிக்க வேண்டும்!

சுவாசம் என்பது சீராக அமைய வேண்டும். சிறு தூசு மூக்கில் சென்றாலும் அலற்சி ஏற்பட்டு புண் ஆகி விடும், சில நேரம் ரத்த கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் பரவும் கிருமிகள் மூலமும் மூக்கு பாதிக்க பட்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மூக்கினை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மூக்கில் சேரும் அழுக்குகளை நீக்க வேண்டும் இல்லையென்றால் சைனஸ் பிரச்சனை அதிகரிக்கும்.
மூக்கில் சிறு அடி பட்டு ரத்தம் வந்தாலும் கவனக்குறைவாக விட கூடாது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மூக்கில் அடிக்கடி கை விட்டு இடித்து கொண்டே இருக்க கூடாது அது நம் நுனி மூக்கில் பட்டு ரத்தம் வரும்.
மூக்கடைப்பு ஏற்படும் போது அடிக்கடி மூக்கை தேய்ப்பதன் மூலம் புண்கள் வரும். இதை சரி செய்ய வெந்நீருடன் தைலம் சேர்த்து ஆவி பிடிக்க மூக்கிற்கு நல்லது.
தைலத்தை நுகர்வதன் மூலம் மூக்கடைப்பு நீங்கி இரவு நன்றாக தூங்கலாம்.