நாவற்பழத்தின் மருத்துவ குணங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று கிருமிகளை அழித்து உடலுக்கு நன்மை தர கூடியது. ரத்த சோகையில் இருந்து விடு பட பயனுள்ளது தான் நாவற்பழம்.
சிறுநீரகம் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் தீர்வு கொடுக்க கூடியது. குடல்களில் ஏற்படும் புண்களுக்கு பயன்படுகிறது. பித்தத்தை தணித்து உடலுக்கு உஷ்னத்தை கொடுக்கிறது நாவற்பழம்.
நீரழிவு நோயாளிகள் தினம் ஒன்று சாப்பிட்டு வர ஆரோக்கியத்தை பெற்று இயல்பு நிலையை அடையலாம். இரைப்பையில் தசைகளும் நல்ல வலு பெரும்.
இதயத்தை நலமுடன் செயல் பட உதவுகிறது, மலச்சிக்கலை குணப்படுத்தவும் பயன்படுகிறது. பெண்களுக்கு மலட்டு தன்மை நீங்க தேவையான விட்டமின் ஈ இருக்கும் இப்பழத்தை உட்கொள்ள நல்ல பலனை கொடுக்கும்.
இதய தசைகள் வலு பெற நாவல் பழம் இன்றியமையாத ஒன்று தான். முகத்திற்கு அழகு சேர்ப்பதிலும் நாவல் பழம் பயன்படுகிறது. இதில் இருக்கும் நீல நிற நிறமிகள் உடலுக்கு அழகு சேர்க்கும் தன்மையும் கொண்டது.