வசம்பின் மருத்துவ குணங்கள் !
Sep 6, 2017, 13:00 IST

- விஷ பூச்சி கடிகளால் ஏற்படும் ரத்த கசிவுகள் மற்றும் வீக்கம், உடலில் சேரும் நச்சு தன்மைகள் அனைத்தையும் போக்க வசம்பை தீயில் நன்கு வாட்டி அதனுடன் எண்ணெய் சேர்த்து கடி பட்ட இடத்தில் வைத்து அழுத்த உடலில் கலந்திருக்கும் விஷ கிருமிகள் அனைத்தும் நீங்கி நலம் பெறலாம்.
- அதிகமான சளி தொல்லையால் ஏற்படும் இருமல் மற்றும் தொண்டை கர கரப்பு, தொண்டையில் ஏற்படும் வலிகள் ஆகிய அனைத்தும் குணம் ஆக வசம்புவை உணவில் எடுத்து கொள்ளலாம்.
- பசியின்மையால் அவதி படுவோர்களும் வசம்பை எடுத்து கொள்ள நல்ல பசி எடுக்கும்.
- மயக்க நிலை, தலை சுத்தல் போன்றவை மூலம் ஏற்ப்பட வாந்தியை கூடிய சரி செய்ய வசம்பை நெருப்பில் கரித்து அதனுடன் இனிப்பு சுவை ஏதேனும் ஒன்று கலந்து சாப்பிட நல்ல பலனை கொடுக்கும்.
- வெந்நீருடன் சேர்த்து வசம்பை நன்கு கொதிக்க வைக்க அந்த நீரை அருந்த வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தில் இருந்தும் நம்மை காக்கிறது.