Tamil Wealth

சருமத்தின் பொலிவை கொடுத்து சிவப்பழகை தரும் மஞ்சளின் நற்குணங்கள்!

சருமத்தின் பொலிவை கொடுத்து சிவப்பழகை தரும் மஞ்சளின் நற்குணங்கள்!

மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு, அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பயன்படும் மஞ்சள், அந்த நிகழ்ச்சியையே அழகு படுத்துவது போலவே அதனை சருமத்திற்கு பயன்படுத்த அழகான தோற்றத்தை கொடுத்து, சிவப்பழகை கொடுக்கும்.

                                                                           மஞ்சளின் நற்குணங்கள் 

பாதங்களை பராமரிக்கும் :

கால்களில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் பிளவுகளை குண படுத்த உதவுகிறது மற்றும் காயத்தினால் ஏற்படும் தழும்புகளை மறைய செய்து சருமத்தை பழைய நிலைக்கு மாற்றும் தன்மை கொண்டது.

செய்முறை :

மஞ்சளை அரைத்து பொடியாக்கி அதனுடன் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து காயம் இருக்கும் இடத்தில் தினமும் பூசி வர வேண்டும். தேங்காய் எண்ணெய் புண்களை விரைவில் ஆற செய்யும் தன்மை கொண்டது.

காயங்களால் ஏற்படும் தழும்புகள் மற்றும் வீக்கங்களை குண படுத்த ஆன்டிசெப்டி குணத்தை கொண்ட மஞ்சளை அரைத்து பயன்படுத்த நல்ல பலனை தரும்.

அழகை தரும் :

அழகை கொடுக்கும் மஞ்சள் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளை தடுத்து முக பொலிவை தரும் ஆற்றல் கொண்டது.

தேவையான பொருட்கள் :

மஞ்சள் -1/2 கப்
கடலை மாவு- 1 கப்
எலும்பிச்சை-1
வேப்பிலை சாறு- போதுமான அளவு
பால் அல்லது பாலாடை- ஒரு கிளாஸ்

முதலில் மஞ்சளை அரைத்து எடுத்து கொள்ளுங்கள் அல்லது கடைகளில் விற்பனையாகும் கஸ்தூரி மஞ்சள் பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேப்பிலை சாற்றினை கலந்து கலவையாக்குங்கள். குறிப்பிட்ட பதம் வந்த பிறகு அதனுடன் பாலினை கலந்து சருமத்தில் பாதிப்பு இருக்கும் இடத்தில் தினம் உபயோகிக்க கருமை நிறம் மாறும் மற்றும் பருக்கள், எண்ணெய் கசடுகள், முகத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகள் உதிர்ந்து பொலிவான சருமத்தை கொடுக்கும்.

கடலை மாவுடன் எலும்பிச்சை சாற்றினை கலந்து கெட்டியான பதம் கொண்டு வந்து, அதனுடன் மஞ்சளை சேர்த்து கலவையாக்குங்கள். இதனை முகத்திற்கு தினம் பயன்படுத்த வெண்புள்ளிகள், ரத்த கட்டுதல், வீக்கத்தினால் ஏற்படும் நீர் வடிதல் போன்ற கோளாறுகளுக்கு மிகவும் பயன் உள்ளது.

Share this story