Tamil Wealth

வீட்டின் தரையை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்!

வீட்டின் தரையை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்!

 

  • நம் வீட்டின் தரையில் இருக்கும் கிருமிகள், நாம் நடக்கும் வேளையில் நம் கால்களின் மூலம் உடலில் பரவி நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும் அபாயம் அதிகமே உள்ளது. தரை சுத்தமாக இருந்தால்தான் நம் வீட்டில் இருக்கும் அனைவரின் ஆரோக்கியம் நலமுடன் இருக்கும்.
  • வீட்டின் தரைகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். சாதரண தரைகளை நீரினையும் அதனுடன் பிளீச்சிங்க் பொடி போன்றவற்றை கொண்டு பயன்படுத்தலாம். வழு வழுப்பான தரையை பேக்கிங் சோடா போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், இதுதான் தரையில் இருக்கும் நுண்கிருமிகளை அழிக்கும்.
  • தரைகளில் சேரும் குப்பைகளை, தூசுகளை உடனே நீக்க வேண்டும். கைகளால் சுத்தம் செய்தால் கை உறைகள் அணிந்து கொள்ளுங்கள் பாதுகாப்பானது.
  • சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டின் தரைகளை தினம் சுத்தம் செய்வதே நல்லது. அது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெரிதும் பயன்படும்.
    தரையில் இருக்கும் சோப்பு தன்மை போகும் வரை சுத்தம் செய்யுங்கள் இல்லையென்றால் அரிப்புகள் ஏற்படும்.

 

 

Share this story