Tamil Wealth

மாத்திரைகள் அதிகம் உட்கொள்ள ஏற்படும் பாதிப்புகள்!

மாத்திரைகள் அதிகம் உட்கொள்ள ஏற்படும் பாதிப்புகள்!

 

  • உடலில் ஊட்ட சத்துக்கள் குறைவாக இருக்கிறது, ரத்தம் இல்லை, இரும்பு சத்துக்கள் குறைபாடு போன்ற பிரச்சனைக்கு அதிகம் மாத்திரைகள் உட்கொள்வதை கடைபிடிக்கிறார்கள். இன்று உடலுக்கு தேவையான சத்துக்களை மாத்திரைகள் மூலம் எடுத்து கொள்ளும் அளவிற்கு சென்று விட்டோம், அதற்காக அதிக மாத்திரைகளை சாப்பிடுகிறோம் அதனால் ஏற்படும் விளைவுகள் தெரிவது இல்லை.

விளைவுகள் :

  • மாத்திரைகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும்.
  • தங்களின் உடல் வாகுவை பொறுத்தே மாத்திரையின் டோஸ் எடுத்து கொள்ள வேண்டும்.
  • பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு தகுந்த அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
    மருத்துவரின் ஆலோசனை இன்றி தாங்களாகவே உட்கொள்ளும் மாத்திரை மஞ்சள் காமாலை, வாந்தி, அதிகமான வயிற்று போக்கு போன்ற கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.
  • மாத்திரை விழுங்கும் போது அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும்.
    அதிக மாத்திரை கண் குறைபாடுகள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • மாத்திரைகளின் அதிக டோஸால் ரத்த வாந்தி மற்றும் கல்லீரலில் கோளாறுகள் ஏற்படும்.

Share this story