நெல்லிக்காயை காய வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!
Mon, 11 Sep 2017

நெல்லிக்காயின் மருத்துவ குணத்தை பற்றி நாம் சொல்லாமலே உங்களுக்கு தெரியும். நெல்லிக்காயை எந்த வடிவிலும் சாப்பிடலாம். அதாவது, ஜூஸ், பொடி போன்று எந்த வடிவிலும் சாப்பிடலாம். நெல்லிக்காயை காய வைத்து தினமும் ஒரு துண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
நெல்லிக்காயை காய வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-
- பெண்களின் கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் குமட்டலை தவிர்க்க காய்ந்த நெல்லி துண்டை வாயில் போட்டு மென்று சாறினை விழுங்கினால் போதும்.
- செரிமான பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மாத்திரைகளை சாப்பிடுவதை விட நெல்லிக்காய் துண்டினை சாப்பிட்டால் இந்த பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
- அளவுக்கு அதிகமான காரமான உணவுகளை சாப்பிடும் போது நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனையை தவிர்க்க நெல்லி துண்டை சாப்பிட்டால் செரிமானம் சீராகும்.
- அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் பாலி பினால் அடங்கியுள்ளதால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். வாயில் ஏற்படும் அதிகப்படியான நாற்றத்தை சரி செய்ய இது உதவுகிறது.
- அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றை சரி செய்ய காய வைத்த நெல்லிக்காய் துண்டினை சாப்பிட்டால் போதும்.