Tamil Wealth

இரவு நிம்மதியான தூக்கத்தை பெற படுக்கையை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்!

இரவு நிம்மதியான தூக்கத்தை பெற படுக்கையை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்!

இரவு நிம்மதியான தூக்கம் வேண்டும் இல்லையென்றால் அது உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும். நல்ல உறக்கமே நல்ல ஆரோக்கியம்.

இரவு தூங்கும் முன் படுக்கையை சுத்தம் செய்த பின்னரே உறங்க செல்வது நல்லது இல்லையென்றால் அதில் இருக்கும் அழுக்குகள் நம்மை தூங்க விடாமல் அரித்து கொண்டே இருக்கும், சில நேரங்களில் பூச்சிகள் இருக்க கூட வாய்ப்பு இருக்கிறது, இவை ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.

போர்வை மற்றும் தலையணையை வாரத்திற்கு இரு முறை கட்டாயம் துவைக்க நல்லது மேலும் மேலும் அதில் இருக்கும் அழுக்குகள் நம் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும்.

படுக்கையில் வைத்து உணவு சாப்பிடுகிறீர்கள் என்றால் அது சிறிது சிதறும் பொழுது அதன் மூலம் பூச்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது.

நாம் உபயோகிக்கும் போர்வை, தலையணை அனைத்தையும் நன்கு சுத்த செய்த பின்னரே உபயோகிக்கலாம்.

போர்வையில் ஏதேனும் சிந்தினால் உடனடியாக அதனை மாற்றுங்கள் இல்லையென்றால் எறும்புகள், பூச்சிகள் சென்று இரவு தூக்கத்தை கெடுக்கும்.

Share this story