Tamil Wealth

சந்தனத்தின் அழகு ரகசியங்கள்!

சந்தனத்தின் அழகு ரகசியங்கள்!

இதை முகத்தில் அரைத்து போடுவதின் மூலம் கருமை நீங்கி முகம் பள பளக்கும், பருக்கள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து பரு இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

இது வியர்வையால் ஏற்படும் வேர்க்குரு , படர்தாமரை எல்லாவற்றிற்கும் சிறந்து விளங்குகிறது.

நறுமணமுடைய  சந்தானம் உடலுக்கு குளிர்ச்சியை  தருவது மட்டுமல்லாமல் மேனிக்கு அழகு சேர்க்கும்.

நீர் கட்டுதல், காய்ச்சலுக்கு சந்தனத்தை சிறுது பாலுடன் கலந்து குடிக்கலாம்.

உடலில் தோல்கள் சுருங்கி  நிலையில் காணப்படுவோர் இதை உடல் முழுவதும் பயன்படுத்த நல்ல பலனை காணலாம்.

சூரியனின் வெப்பத்தினால் உடலில் ஏற்படும் தழும்புகள் கட்டிகளுக்கு எலும்பிச்சையுடன் சந்தனத்தை சேர்த்து தடவலாம்.

கண்களின் கீழ் புறம் வரும் கருமை நிறத்தை நீக்க சந்தனத்தை கண்களை சுற்றி பூச வேண்டும். நல்ல மணம் வீச கூடிய இதை கைகளில் வரும் வெடிப்புகளுக்கு உபயோகிக்கலாம்.

உடலில் ஏற்படும் அலற்சிக்கு, அந்த இடத்தில் நன்கு தேய்த்து விட சருமத்தின் நிறம் மாறி அலற்சி நீங்கி பழைய நிலையை அடையும்.

Share this story