அழகை அள்ளி தரும் பப்பாளி பழம்!

பார்ப்பதற்கே அழகான நிறத்துடன் தோற்றத்தை கொண்ட பப்பாளி பழம் பெரிதாக இருப்பது போலவே அதன் நமைகளும் ஏராளம்.
அழகு குறிப்புகள் :
உடல் பருமனை குறைக்க பயன்படுத்துவது போலவே முகத்திற்கு இதன் சதை பற்றை நன்கு மசித்து முகத்தில் பூச வேண்டும், அது முகத்தில் எவ்வித கோளாறுகளும் வராமல் தற்காத்து கொள்ளும்.
வறட்சியான தோற்றத்தை கொண்டவர்கள் பப்பாளியை தினம் பயன்படுத்த மற்றும் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
இதனை சாப்பிடுவதின் மூலமும் முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும் மற்றும் உடலில் இருக்கும் நச்சு தன்மையை அழிக்கும், தேவையற்ற கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றி உடல் எடையை குறைக்கும்.
பப்பாளி சதை பற்றுடன் எந்த பொருட்களை பயன்படுத்த வழு வழுப்பான சருமத்தை கொடுக்கும்.
1.தேன்
2.கடலை மாவு
3.தயிர்
4.மஞ்சள்
5. மற்ற பழங்களின் சாறு அல்லது தோல்
பப்பாளியுடன் எலும்பிச்சை சாற்றினையும் கலந்து தினமும் முகத்தில் நன்கு தேய்த்து காய்ந்த பின் முகத்தை நீரினை கொண்டு சுத்தம் செய்து வர நாளடைவில் முகம் கூடுதல் அழகை பெறும்.