கட்டயமாகும் ஏசி லாரி

கட்டயமாகும் ஏசி லாரி

இந்தியாவில் வரும் 2017 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி, முதல் லாரிகளில் ஏசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லாரி ஓட்டுனர்கள் படும்பாடு சொல்லத் தேவையில்லை. பல நாட்கள் குடும்பத்தை பிரிந்து சாலைகளில் வாழ்க்கையை மேற்கொண்டு, கிடைத்தை உண்டு, கடுமையாக உழைத்தாலும், லாரி ஓட்டுனர்கள் என்றால் இந்திய சமூகத்தில் அவர்களுக்கென உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. ஆனால் அவர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தலே போதும் பொருளாதாரமே ஸதம்பிக்கும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கருத்தில் கொண்ட இந்திய அரசு ஆணை ஒன்றை பிறப்பித்து உள்ளது. அந்த ஆணையில் ஒட்டுநர் கேபினில் மாற்றம் செய்ய சொல்லியுள்ளது. அதில் முக்கியமாக நல்ல இட வசதியுடன், ஏசியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பின் விற்பனைக்கு வரும் லாரிகள் அனைத்திலும் இது கட்டாயம். இதனால் இந்திய லாரி ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.

Share this story