உண்மையில் வெங்காயம் தலைமுடி உதிர்வினை சரிசெய்யுமா?

முடி கொட்டுதல் பிரச்சனை என்பது பலர் மத்தியிலும் இருக்கும் பிரச்சினையாகும், இந்தப் பிரச்சினைக்கு பலரும் கூறும் தீர்வு வெங்காயம்தான். இந்த வெங்காயத்தில் தலை முடியை சரிசெய்யக் கூடிய எந்தமாதிரியான சத்துகள் உள்ளன? அல்லது உண்மையில் வெங்காயம் தலைமுடி உதிர்வினை சரிசெய்யுமா? என்பது குறித்த கேள்விகள் கேட்கும் நபர்களுக்கான பதிலைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
அதாவது நாம் தலைமுடிக்குத் தேவையான என்னென்ன சத்துகள் வெங்காயத்தில் உள்ளது என்று பார்க்கலாம். அதாவது, கலோரிகள், நீர், கார்ப்ஸ், கொழுப்பு புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் பி 6 மற்றும் பொட்டாசியம், கந்தகம் போன்றவைகள் உள்ளன.
அதாவது வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதால், நமது முடி வளர்ச்சியானது அதிகரிக்கச் செய்கிறது. மேலும் வெங்காயத்தில் கேடலாஸ் நொதியானது, நரை முடி ஏற்படுவதைக் குறைக்கிறது.
மேலும் நாம் வெங்காயத்தினைப் பயன்படுத்தி அழுத்தி தேய்க்கும்போது முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இவ்வாறு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலைமுடியானது வலுவாகிறது. புதிதாக தலைமுடியானது முளைப்பதோடு, ஏற்கனவே உள்ள முடியும் கொட்டுவது இல்லை. புதிய முடிகள் முளைப்பதற்குக் காரணம் இதில் உள்ள கந்தகமே ஆகும்.