எலும்பிச்சை சாற்றை கொண்டு டீ செய்து குடிக்க ஆரோக்கியத்தை பெறுவோமா?
Sep 5, 2017, 17:30 IST

எலும்பிச்சை சாற்றை கொண்டு டீ தயாரிக்க படுகிறது. இதனை வெந்நீருடன் கலந்து அருந்த உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை.
லெமன் டீ :
காலை எழுத்துடன் அருந்தும் மற்ற விதமான காப்பிகள் குடிப்பதை நிறுத்தி லெமன் டீயை குடிக்க அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவீர்கள்.
- குளிர் காலங்களில் ஏற்படும் சளி தொல்லைகள் மற்றும் இருமல், காய்ச்சல் போன்ற கோளாறுகளுக்கு இதை குடிக்கலாம், இதனால் ஏற்படும் மார்பு சளி, நெஞ்சு எரிச்சல் போன்றவையும் குணம் ஆகும்.
இன்சுலின் குறைவால் ஏற்படும் கோளாறுகள் அனைத்திற்கும் லெமன் டீயை கலந்து குடிக்க பல வித நோய்களிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்.
- மழை காலங்களில் ஏற்படும் குளிர்ச்சிக்கு சூடான பானம் குடிக்க நல்ல சுறு சுறுப்பு கிடைக்கும் அதற்கு இந்த லெமன் டீயை குடிக்கலாம்.
- செரிமானத்தால் ஏற்படும் வயிற்று பிரச்சனைகள் மற்றும் அடிக்கடி வரக்கூடிய தலை வலிகள் நீங்க இந்த டீயை குடித்து வர நலன் கிடைக்கும்.