ருசி மிகுந்த சீனி கிழங்கு!!
Mon, 4 Sep 2017

கிழங்குகளில் சீனி கிழங்கு நல்ல ருசி கொண்டது. இதை வேக வைத்து சாப்பிடுவதின் மூலம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
சீனி கிழங்கின் மருத்துவம் :
- ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள சீனி கிழங்கை வேக வைத்து சாப்பிட நமக்கு கிடைக்கும் உயிர் சத்துக்கள் நன்மை கொடுக்க கூடியதே.
- சீனி கிழங்கில் இருக்கும் சோடியம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றுகிறது.
ஹைபர் டென்சன் என்ற ரத்த அழுத்தத்தை சம நிலைக்கு கொண்டு வந்து ரத்த ஓட்டத்தை சீராக செயல் பட செய்கிறது.
- மூல நோயில் இருந்து விடுபட இந்த கிழங்கை அவித்து சாப்பிடலாம் மற்றும் மேக நோய்களையும் சரி செய்யும்.
- பசி எடுக்கும் நிலையில் சாப்பிட நல்ல உணவாகவும் கருத படுகிறது.
- கோடைகாலங்களில் உருவாகும் அதிக வெப்பத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு தீர்வை கொடுத்து புத்துணர்ச்சியை கொடுத்து சிறப்பாக செயல் ஆற்ற செய்கிறது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நச்சு தன்மையை அழிக்கும் திறனை கொண்டது.