அமிலத்தன்மைக்கு மாத்திரைகளை உட்கொள்ளலாமா ? கூடாதா?

அமிலத்தன்மை என்பது நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் செரிமானம் அடைவதாலும் மற்றும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளும் தான் காரணம்.
அமிலத்தன்மைக்கான மாத்திரை :
அமிலத்தன்மைக்கு அதிகம் மாத்திரைகள் உட்கொள்வது சிலருடைய பழக்கம். கடைகளில் விற்பனை ஆகும் மருந்துகளை வாங்கி குடிக்க அந்த நேரத்திற்கு மட்டுமே பலனை தரும், அதற்காக அதனையே எப்பொழுதும் எடுத்து கொள்ள கூடாது. இப்படி எடுத்து கொண்டால் அமிலத்தன்மையோடு வேறு சில இன்னல்களையும் சந்திக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
பாதிப்புகள் :
பசியின்மை
மஞ்சள் காமாலை
செரிமானப் பிரச்சனை
உணவு பழக்க வழக்கம் :
நாம் உணவுகளை எடுத்து கொள்வதில் செய்யும் தவறுகள் அதிகமே .
விருந்தினர் வீட்டுக்கு சென்றால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். அளவாக சாப்பிடாமல் வீணாகி விடும் என்று வயிறு நிறைய சாப்பிடுகிறார்கள். இது அறவே கூடாது. உங்களுக்கு போதுமான அளவே சாப்பிட வேண்டும்.
அதிகமாக எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம், எதனையும் அளவாகவே வைத்து கொள்ளுங்கள்.
அவசர அவசரமாக உணவுகளை எடுத்து கொள்ள கூடாது, சிறிது பொறுமையுடன் அரைத்து மெல்லுங்கள்.
சூடு, காரம், புளிப்பு போன்றவைகள் அதிகம் இருக்கும் உணவுகளையோ அல்லது பானங்களையோ அதிகம் சாப்பிட வேண்டாம், இது உங்களுக்கு வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும்.
மசாலா பொருட்கள் அதிகம் இருக்கும் உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.
மேற்கூறிய காரணங்களால் ஏற்படும் அமிலத்தன்மை புண்களை ஏற்படுத்தும். இதனால் உணவு குழாய்களில் பாதிப்புகள் ஏற்படும், வீக்கம், சுருக்கங்கள் குணம் ஆக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.
உடல் பருமன் :
உடலில் சேரும் கொழுப்புகளால் ஏற்படும் தொப்பை காரணமாக இரைப்பையில் அமிலத்தன்மை பாதிப்புகள் ஏற்பட்டு, உணவு குழாய்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதய கோளாறுகள்
இதயத்தில் ஏற்படும் சிறு எரிச்சலை கூட கவன குறைவாக எடுத்து கொள்ள கூடாது, மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம். அமிலத்தன்மையால் நெஞ்செரிச்சல் உருவாகும் இதுவே நாளடைவில் உயிருக்கே ஆபத்தாக அமைய கூடும். மாரடைப்பை ஏற்படுத்தும் இதனை சரி செய்ய கேஸ்ட்ரோ எண்டோஸ்கோப்பி’ (Gastro endoscopy) மற்றும் இசிஜி (ECG) போன்ற சோதனைகளை செய்து கொள்ளுங்கள்.