Tamil Wealth

செரிமான கோளாறுகள் உருவாக காரணமான சில அறிகுறிகள் !

செரிமான கோளாறுகள் உருவாக காரணமான சில அறிகுறிகள் !

உங்களுக்கு செரிமான கோளாறுகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். உணவு உண்டபின் ஏற்படும் கோளாறுகள் மற்றும் சில உடல் உபாதைகள் உங்களுக்கு செரிமான கோளாறுகள் இருக்கும் என்பதை குறிக்கும்.

அறிகுறிகள் :

#1

சாப்பிட உடன் தூக்கம் வராமல் தவித்தால் மற்றும் சிலருக்கு சாப்பிட உடனே வயிற்றில் உப்புசதம் காண பட்டால் அவர்களுக்கு செரிமானம் சீராக நடைபெற வில்லை என்று அர்த்தம். ஆகவே போதுமான உணவுகளையே இரவு நேரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

#2

உங்கள் உடல் எடையில் மாற்றத்தை வைத்தே உங்களுக்கு செரிமான கோளாறு இருக்கிறது என கணக்கிடலாம். தொடர் என்று எடை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் இது ஒரு அறிகுறியாக இருக்கிறது.

#3

வாயில் மற்றும் நாசித்துளையில் இருந்து வெளிப்படும் துர்நாற்றம் கூட உங்கள் செரிமான கோளாறுகளால் ஏற்படும். வியர்வையில் இருந்து கூட வெளிப்படும் துர்நாற்றமும் இதற்கான அறிகுறியே.

#4

மலச்சிக்கல் கோளாறுகள் இருந்தாலும் நீங்க எடுத்து கொண்ட உணவுகள் ஒழுங்காக செரிமானம் அடையவில்லை என்று அர்த்தம். நல்ல ஆரோக்கியமான உணவுகளையே எடுத்து கொள்வது நல்லது.

#5

சருமத்தில் திடீர் என்று ஏற்படும் பருக்களுக்கு காரணம் கூட, நீங்க சாப்பிட உணவுகளின் செரிமான பிரச்சனைதான். இதனால் ஏற்படும் பருக்களின் பாதிப்புகள் தொற்றுக்களை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படும் மற்றும் அலற்சியை உருவாக்கும்.

#6

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் முடி வளர்ச்சி தடுக்கப்படும் மற்றும் நகங்கள் அடிக்கடி உடைவது போன்ற அறிகுறிகள் தென்படும். இவைகள் செரிமானத்தில் ஏற்படும் கோளாறுகளாளே தான் உருவாகும்.

#7

கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் பாதிப்பு உருவாவதற்கு காரணம் உடலில் இருக்கும் இரும்பு சத்துக்கள் குறைபாடு தான். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது, கொழுப்புகள் தான் சேரும் மற்றும் உடல் மிகவும் சோர்வு தன்மையை கொடுக்கும்.

#8

செரிமானம் என்றாலே அதற்கு தேவையான என்சைம் குறைந்த அளவில் இருந்தால் நீங்க எந்த உணவுகளை எடுத்து கொண்டாலும் ஒவ்வாமை ஏற்பட்டு சில கோளாறுகளை ஏற்படுத்தும்.

Share this story