சுக்கு ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்று!

சுக்கு மருத்தவ பயனை அதிகம் கொண்டது. இது இருமலை குணப்படுத்த உதவுகிறது.
உடலில் ரத்த ஓட்டத்தை சம நிலையில் வைக்க உதவுகிறது, சளி தொல்லையை கட்டுக்குள் வைத்து கொள்ளும்.
காய்ச்சலுக்கு சுக்கை பால் அல்லது தேனுடன் சேர்த்து குடித்து வர உடலின் வெப்பம் தணிந்து உடலுக்கு பெலத்தை கொடுக்கும்.
தேவையற்ற கொழுப்புக்குகளை கரைத்து உடலை சீராக வைத்து கொள்ள உதவும் பொருட்களில் ஒன்றுதான் சுக்கு.
செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. சுவாச கோளாறுகளை சரி செய்ய இதை இடித்து குடிக்க வேண்டும்.
உணவு ஒத்துக்கொள்ளாமல் ஏற்படும் வயிற்று வலிகளுக்கு சுக்கு நல்லது, உணவுகளை செரித்து கட்டு படுத்தும்.
நமது சருமத்தில் ஏற்படும் அரிப்பு, வீக்கம், தழும்புகள் போன்ற வியாதிகளுக்கு சுக்கு பயன்படுத்த படுகிறது. இதில் இருக்கும் வேதி பொருட்கள் நம்மை பாத்து காக்கும்.
சுக்கை தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறையும், கழிவுகளை வெளியேற்றி மலச்சிக்கலை தடுக்கும், இதய நோய்களுக்கு நல்லதொரு பயன் அளிக்க கூடியது.